10 பொருத்தத்தில் முக்கியமாக பொருந்த வேண்டியது எது? அதன் அர்த்தங்கள் என்ன?

Report Print Printha in ஜோதிடம்

ஜோதிடத்தில் திருமணத்திற்கான பத்து பொருத்தம் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்று கூறுவார்கள். அதில் பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கமாக உள்ளது.

அந்த 10 பொருத்தத்தில் மகேந்திர மற்றும் வசியப் பொருத்தம் இல்லற வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகும்.

தினப் பொருத்தம்

தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

கணப் பொருத்தம்

குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக் கூடிய பொருத்தம் தான் குணப் பொருத்தம். இது மனைவி மற்றும் கணவன் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

மகேந்திரப் பொருத்தம்

திருமணம் ஆகப்போகும் ஆண், பெண்ணுக்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் என்பது திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் எப்படி இருக்கும் என்று பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தமும் முக்கியமானதாகும்.

யோனிப் பொருத்தம்

யோனிப் பொருத்தம் என்பது கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது பொருத்தமாகும்.

ராசிப் பொருத்தம்

ஆண் மற்றும் பெண்ணிற்கு ஒரே ராசியாகவும், நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த பொருத்தத்தில் அப்படி இருந்தால் தான் அவர்களின் வம்சம் விருத்தியாகுமாம்.

ராசி அதிபதிப் பொருத்தம்

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். இதில் ஆண், பெண் இராசிக்கு இடையில் பகை தவிர நட்பு, சமம் ஆகிய இரண்டு பொருத்தம் இருந்தால் நல்லதாம்.

வசியப் பொருத்தம்

கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. இந்த பொருத்தம் கணவன்-மனைவிக்குள் இருக்கும் ஈர்ப்பைக் குறிக்கிறது.

ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம்

கணவனின் ஆயுள் பலம் எப்படி இருக்கும் என்று பார்க்கப்படும் பொருத்தமாகும். எனவே இப்பொருத்தம் பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக அவசியம்.

வேதைப் பொருத்தம்

திருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்பம் மற்றும் துன்பங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக் கூடியதாக இந்த வேதைப் பொருத்தம் உள்ளது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments