சனிப்பெயர்ச்சி பலன்கள்- துலாம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

Report Print Meenakshi in ஜோதிடம்

1193ம் ஆண்டு ஹேமலம்ப- ஹேவிளம்பி வருடம் மார்கழி 1ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.38க்கு (16- 12- 2017) அன்று சனீபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுஷ் ராசிக்கு பிரவேசிக்கிறார்.

தனுஷ் ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் தங்க உள்ளார், இந்நிலையை கொண்டு மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளுக்கும் நடக்கக்கூடிய பலாப்பலன்களை ஆன்மீக ஜோதிடர் S.P.ராஜன் D.A., கணித்துள்ளார்.

துலாம்

சித்திரை 3,4ம் பாதம், சுவாதி-விசாகம் 1,2,3ம் பாதம் பெயர் எழுத்துக்கள்: ரா,ரி,ரு,ரெ,ரோ,தா,தி,து,தே

தராசு ராசிக்காரர்களான உங்களுக்கு தான் எத்தனை தங்க மனசு, எல்லாவிதத்திலும் சமத்துவமாகவும் – பரிவுடனும் வாழ்க்கையை வாழ்பவர்கள்.

நான் என்ற அகம்பாவம் எப்போதும் கொஞ்சம் உண்டு. கடும் கோபமும் சில நேரம் பிறரை உங்களிடமிருந்து விலக்கிவிடும். இருந்தாலும் எதற்கும் பயப்படமாட்டீர்கள்.

உங்களுக்கு தான் கடந்த காலத்தில் இருந்த சோதனைகள் சொல்லி முடியாது. எத்தனையோ நல்ல வாய்ப்புகள் கைநழுவி போய் இருக்கும்.

பணவிரையமும் – பகையும் இது வரை நீங்கள் சம்பாதித்த சொத்தாக இருக்கும். ஆனால் இப்போது கொஞ்சம் காலம் மாறி உள்ளது.

சனி-3ல் உள்ளார். இது நல்ல காலம் தான். ஆகவே இது வரையும் இருந்த இருள் மாறிப் போகும். என்ன விடியலுக்காக கொஞ்சம் காத்து இருக்க வேண்டும். ஆனாலும் கொஞ்ச கொஞ்சமாக நிலைமை சீர் அடையும்.

மறைமுக எதிர்ப்பு கற்றுத்தெரியாமல் போகும். ஆயினும் ராசியின் மேல் உல்ள வியாழன் இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, சோதனையை உண்டு பண்ணத்துடிப்பார். பயப்படாதீர்கள் உங்கள் ஜாதகத்தின் படி நல்ல திசாப்புத்தி நடந்தால் வெற்றி பல வழிகளில் குவியும்.

ஓரளவிற்கு 20-12-2018 வரை சனீ உங்களை காப்பாற்றுவார். இதற்கு பின் குதிரை பாய்ச்சலில் உங்கள் முன்னேற்றம் உண்டாகும்.

முதலில் ஒரு கட்டம் 20-12-2018 வரை, பின்11/2 ஆண்டுகள் சிறப்பான காலம் இது தான் கணக்கு, சித்திரை – சுவாதி – விசாகம் நட்சத்திரம் உங்கள் ராசி.

புலி – எருமை – புலி இதுதான் உங்கள் நட்சத்திர மிருகம். பாருங்கள் புலி என்றால் யாருக்கும் கிலிதான் – அதனால் தான் உங்கள் ராசி மேன்மை பெறுகிறது.

உங்களின் செய்தொழில் ஏற்றம் உண்டாகும். தேவையான முதலீடுகள் கடனாக கை வந்து சேரும். உங்களின் உற்பத்தி பொருளுக்கு மதிப்புக்கூடும். உணவு உடை போன்ற தொழில் செய்வோருக்கு வெற்றி நிச்சயம்.

கூட்டு தொழிலுக்கும் முய்ற்சி செய்யுங்கள். வியாபாரிகளுக்கு இனிய நல்ல காலம் தான். கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்பின் வெற்றி சிறிது காலத்திற்கு பின்னர் தெரியும். கணக்குகளை சரியாக வைத்து கொள்ளவும்.

முதல் ஒரு வருடம் அவ்வளவு சிறப்பான காலம் இல்லை. வியாழன் – ராகு –கேது நடப்பவர்கள் உங்கள் ஜாதகப்படியான தோஷ பரிகாரம் செய்துக் கொள்ளுவது நல்லது.

பெரும்பாலும் ஒருவர் ஜாதகத்தில் ஹம்ச யோகம், மளவ யோகம், பத்திராயோகம், சசயோகம் போன்ற யோகங்களில் ஒன்று. இரண்டு இருந்தாலும் காலத்தை வெல்லலாம், மூன்ற் யோகங்கள் இருந்தால் காலம் உங்கள் காலடியில் தூங்கும்.

வேலையாட்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் உரிய நல்ல காலம்தான். படித்தவர்களுக்கு அரசு கடும் முயற்சிக்கு பின் 20-12-2018 வாக்கில் கிட்டிவிடும்.

10மிட திசாபுத்தியுள்ளவர்களுக்கு உத்தியோக வாய்ப்பு உண்டு. வெள்நாட்டில் வேலை தேடுபவர்களுக்கு உடன் கிட்டிவிடும். நன்றாக சம்பாதிக்கப் போகிறீர்கள். சேமிப்பு உண்டாகும். சிலர் வீடு, வாகனம், நிலம் வாங்கலாம்.

உத்தியோகஸ்தர்க்கு நன்றான காலம். பதவி உயர்வும் – திடீர் அதிர்ஷ்டமும் சிலருக்கு கிடைக்கும். ஏற்ற நல்ல மாறுதல்கள் உண்டாக தடை இராது. குடும்ப சூழல் மனத்திற்கு தெம்பை அளிக்கும்.

படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும். பண்களுக்கு மிக சிறப்பான காலம். திருமண முயற்சிகள் கைகூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை- உயர்கல்வி போன்றவை உண்டாகும்.

பொதுவில் 20-12-2018க்கு பின் ஏதோ ஒரு நிலையில் நீங்கள் உயர்ந்து நிற்கப் போகிறீர்கள். உங்கள் ராசியின் அதிபதி சுக்கிரன். அவரை வணங்குங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்- 5,6

அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, வெளிர்நீலம்

அதிர்ஷ்ட கல்- வைரம்

வணங்க வேண்டிய தெய்வம்- ஸ்ரீ மஹாலட்சுமி

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments