சனிப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ராசிக்காரர்களின் கவனத்திற்கு

Report Print Meenakshi in ஜோதிடம்

1193ம் ஆண்டு ஹேமலம்ப- ஹேவிளம்பி வருடம் மார்கழி 1ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.38க்கு (16- 12- 2017) அன்று சனீபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுஷ் ராசிக்கு பிரவேசிக்கிறார்.

தனுஷ் ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் தங்க உள்ளார், இந்நிலையை கொண்டு மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளுக்கும் நடக்கக்கூடிய பலாப்பலன்களை ஆன்மீக ஜோதிடர் S.P.ராஜன் D.A., கணித்துள்ளார்.

கன்னி

வளமான வாழ்க்கை பக்கமே, மனதை செலுத்தும் எண்ணம் உள்ளவர்கள். எல்லோரும் எல்லா நலனும் பெற்று பெரும்வாழ்வு வாழ எண்ணும் குணம் கொண்டவர்.

எதையும் அழகுற காணும் – கனிவான எண்ணம் கொண்டவர்கள். ஒரு வழியில் பிடிவாதம் இருக்கும். செய்யும் காரியத்தை நல்ல திட்டம் போட்டு செய்பவர்கள்.

கற்பனை வளம் கொண்டவர்கள். இனிப்பாக பேசுவீர்கள். கயை உள்ளம் உள்ளவர்கள். கருணையும் உண்டு. உங்களின் ராசிக்கு இப்போது சனி-4 ல் உள்ளார்.

சனீ இட சனீ சிறப்பானது ஆகாது தான், இருப்பினும் வியாழன் போன்றவர்கள் நன்றாக இருப்பதால் நலம் உண்டாகும். நிறையவே நன்மைகள் நடக்கும்.

வியாழன் பலம் என்பது கன்னிராசிக்கு நிறையவே நன்மையை செய்துவிடாது. செய்தொழில் சிறிய வெற்றி உண்டாகும். வருமானம் இருந்தாலும் கூடவே செலவும் உண்டாகும். சேமிப்பு இல்லை.

சில நேரத்தில் சிலருக்கு ஏற்றமாகவும் பலன் உண்டாகும். உங்கள் ஜாதகப்படி நல்ல விதமான திசாபுத்தி நடந்தால் சூப்பர்தான். மேலும் சனீ மகாதிசை – வியாழ மகா திசையும் தற்போது நடந்தால் நன்றாக இராது. மற்ற திசைகள் நலம் செய்யும்.

குடும்ப சூழ்நிலை சில நேரம் கஷ்டப்படுத்தலாம். விரைவாக நற்பலனை எதிர்பார்ப்பீர்கள். அது சரியாக வராது.

உடல்நலம் அடிக்கடி பிரச்சனை செய்யும். ஆயினும் ஆயுள்பலமாகத்தான் இருக்கும். மிகக் கடுமையான ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு பாதிப்பு உண்டாகும். தகுந்த பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

இயற்கை சூழ்ந்த கன்னிராசியில் பிறந்தவர்களான உங்களுக்கு இயற்கை தான் கடவுள் என்பது நன்கு தெரியும். உண்மையில் நீங்கள் பிறந்த மதத்தை நம்பும் குணம் கொண்டவர்கள். கடவுளுக்காக எதையும் செய்வீர்கள். ஆகவே இறைவனின் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு.

அச்சம் இல்லாத காரியம் வெற்றியை தரும். ஆகவே முயற்சினால் தொழில்வளர்ச்சி உண்டாகும். கூட்டு தொழில் என்றால் சுபமாக முன்னேற்றம் உண்டு.

சில நேரம் உடல்நிலை பாதிப்பை காட்டலாம். பொல்லாத திசை நடப்பவர்களுக்கு மருத்துவ செலவு உண்டு.

உங்கள் ஜாதகப்படி 1-5-9-க்குரியவர்களின் திசாபுத்தி நடந்தால் நல்லது உண்டாகும். ஆனால் 2-7-6-8-12 என்றால் வீண் விரையம், கடன், நோய், சச்சரவு என்று ஏதெனும் மாறி மாறி தொல்லை தரலாம். சிலர் தொழிலில் கடன்படவும் கூடும்.

தனியாரிடம் கடன் வாங்க வேண்டாம். சிறு தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். இவர்களுக்கு சேமிப்பு உண்ஆகும். காய்கறி – பல சரக்கு –உணவு சம்பந்தமான தொழில்கள் ஏற்றம் உண்டு. கனரகமான பெரிய தொழில் செய்வோர்க்குதான் பிரச்சனை.

பொதுவாக 20-12-2018க்கு பின் ஒரு புயல் வீசக்கூடும். நின்று நிதானமாக செயல்பட வேண்டும். 20-12-2018க்கு பின்னர் கைக்கட்டி இருளில் விட்டதுபோல் அடுக்கடுக்காக தொல்லைகள் வரலாம். ஆகவே தேவையான பாதுகாப்பை முதல் ரவுண்டில் செய்து கொள்ள வேண்டும்.

சனீ பெயர்ச்சியின் ஆரம்பம் ஒரு வருடம் இனிப்பான கோளம் உண்டு. பின் 11/2 வருடம் மிகுந்த வாட்டல் உண்டாகும்.

வியாழன் 3-ல் உள்ளது என்ற காலத்தில் 20-12-2018க்கு பின் தான் பொல்லாத காலமாகும். வியாபாரிகளுக்கு லாபம் எதிலும் உண்டாகும். ஆனால் கணக்குகளை சரியாக வைத்து கொள்ளவும்.

வயது முதிர்ந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். மதுபானம், மாமிசம் போன்றவற்றை விட்டுவிடவும். சித்திரை நட்சத்திரகாரர்கள் அசைவமாக இருந்தால் குற்றம் இல்லை. ஆனால் உத்திரம் –அஸ்தம் நட்சத்திரகாரர்கள் சைவமாக தான் இருக்க வேண்டும்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து விடும். படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும் கிடைக்கும். வெளிநாட்டிலும் வேலை கிடைக்கும். பெண்களுக்கு சுபமான காலம் 20-12-1018 வரை உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்- 2,5,6,8

அதிர்ஷ்ட நிறம்- பச்சை

அதிர்ஷ்ட கல்- மரகதம்

வணங்க வேண்டிய தெய்வம்- ஸ்ரீ கோதண்ட ராமர்

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments