துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு துன்பங்கள் தூளாகும் நாள்...!

Report Print Aravinth in ஜோதிடம்
248Shares
248Shares
ibctamil.com
மேஷம்

விரக்தி நிலை மாறி விடிவுகாலம் பிறக்கும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவர். குடும்ப உறுப்பினரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

ரிஷபம்

முயற்சி கைகூடும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினரின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். மனக்கசப்பு மாறும். மகிழ்ச்சிப் பயணம் உண்டு.

மிதுனம்

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். பயணங்களின் போது கைப்பொருளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

கடகம்

இன்னல்கள் தீர இறைவனைப் பணிய வேண்டிய நாள். தனவரவு அதிகரிக்கும். செலவுகளைக் குறைத்துச் சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு.

சிம்மம்

பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழிலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டு விலகிச் செல்வர். நீண்ட தூரப்பயணங்களால் நன்மை கிட்டும்.

கன்னி

கொடுத்த தொகை குறித்தபடி வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்ப அமைதிக்கு பாதகம் விளைவித்தவர்கள் விலகுவர். தொழில் முயற்சியில் வெற்றி கிட்டும்.

துலாம்

துன்பங்கள் தூளாகும் நாள். துணிந்து எடுத்த முடிவுகளால் வெற்றி கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர். புதிய திட்டங்கள்வெற்றி பெறும்.

விருச்சிகம்

மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள்.குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. அமைதி உண்டாக அனைவரையும் அனுசரித்துக் செல்வது நல்லது.

தனுசு

மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள்.குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் வாங்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. அமைதி உண்டாக அனைவரையும் அனுசரித்துக் செல்வது நல்லது.

மகரம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தொழில் சம்மந்தமாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். சலுகைகள் உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

கும்பம்

அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிட்டும் நாள். பணவரவு போதுமானதாக இருக்கும். இடம், பூமி சம்மந்தப்பட்ட வகையில் லாபம் உண்டு. தொழிலில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மீனம்

எண்ணங்கள் எளிதில் ஈடேறும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். பூர்வீகச் சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தாய்வழி அனுகூலம் உண்டு.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments