தனுசு ராசி நேயர்களே இன்று உங்களின் லாபம் இருமடங்காகுமாம்..!

Report Print Aravinth in ஜோதிடம்
130Shares
மேஷம்

தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். கல்யாணக் கனவுகள் கைகூடும். உறவினர்களின் பாராட் டுக்களைப் பெறுவீர்கள். வெளிவட் டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வருமானம் திருப்தி தரும்.

ரிஷபம்

பணியாளர்களிடம்பக்குவமாக நடந்துகொள்ள வேண்டிய நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோக வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பரவசமடையும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளா தார நிலையில் முன்னேற்றம் ஏற் படும். சுபகாரியப் பேச்சுக்கள் முடி வாகும். உதிரி வருமானம் உண்டு.

கடகம்

புகழ் மிக்கவர்களால் புதியவழி பிறக்கும் நாள். ஆக்கபூர்வமான செயலொன்றைச் செய்து முடிப் பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

சிம்மம்

சம்பள உயர்வோடு சந்தோஷ மடையும் நாள். தனவரவு தாராள மாக வந்து சேரும். வீட்டுக்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும்.

கன்னி

புதிய பாதை புலப்படும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டு வீர்கள். வாங்கல் – கொடுக்கல்கள் ஒழுங்காகும். திடீர்ப் பயணத்தால் தித்திக்கும் பலன் கிடைக்கும்

துலாம்

நட்பு பகையாகும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள புது முயற்சி எடுப்பீர்கள். மாற்றினத்தவர்களால் மனக்குழப்பம் ஏற்படும். பயணங்களால் பலன் உண்டு.

விருச்சிகம்

விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் நாள். பொரு ளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

தனுசு

லாபம் இருமடங்காகும் நாள். நீண்டதூரப் பயணங்கள் கைகூடு வதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு புதிய பங்கு தாரர்கள் வந்திணைவர். வீடு கட்டும் பணி தொடரும்.

மகரம்

தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தந்தை வழியில் சிறுசிறு மனச்சங்கடங்கள் ஏற்பட்டு அகலும்.

கும்பம்

கோரிக்கைகள் நிறைவேறக் கோவில்களுக்குச் செல்ல வேண் டிய நாள். காலையில் செய்ய மறந்த வேலையொன்றை மாலையில் செய்து முடிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.

மீனம்

நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி காண வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். அக்கம், பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. மருத்துவச் செலவுகள் உண்டு.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments