இன்றைய ராசி பலன்கள்

Report Print Aravinth in ஜோதிடம்
325Shares
மேஷம்

செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

ரிஷபம்

பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நீண்ட நாளைய ஆசை ஒன்று நிறைவேறும். தொழில் ரீதியாக பங்குதாரர்களோடு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மிதுனம்

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். பணிச்சுமை கூடும். கொடுக்கல்–வாங்கல்களில் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும். வருமானம் அதிகரிக்கும். அதிக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டு.

கடகம்

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். வராத உறவினர்கள் உங்கள் வீடுகளுக்கு திடீரென வரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். கல்யாண வாய்ப்பு கைகூடும்.

சிம்மம்

இனிமையான நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் விலகிய கூட்டாளிகள் விரும்பி வந்திணைவர்.

கன்னி

விரயங்களைச் சமாளிக்க வேண்டிய நாள். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசு வழிச் சலுகை கிட்டும். பிள்ளைகள் வழியில் பெருமையான செய்திகள் வந்து சேரலாம்.

துலாம்

வருமானம் இருமடங்காகும் நாள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. அன்னிய தேசத்திலிருந்து வரும் தொலைபேசித் தகவல் அனுகூலம் தரும்.

விருச்சிகம்

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு

மனக்குழப்பம் அகன்று மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். இனத்தார் பகை மாறும். அலைச்சல் குறைந்து ஆதாயம் காண்பீர்கள்.

மகரம்

ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். வழிபாட்டால் வளர்ச்சி கூடும். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். முக்கிய வேலைக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும்.

கும்பம்

பாசம் காட்டியவர்களின் நேசம் கிடைக்கும் நாள். சொந்த பந்தங்களுக்காகச் செலவுகளைச் செய்ய முன்வருவீர்கள். சில பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

மீனம்

வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலமாக முடியும். நட்பு வட்டம் விரிவடையும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments