இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளா?

Report Print Aravinth in ஜோதிடம்
மேஷம்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். நினைத்ததை முடித்து நிம்மதி காண்பீர்கள். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

ரிஷபம்

வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறலாம். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.

மிதுனம்

நினைத்தது நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.பொது வாழ்வில் புகழ் கூடும்.

கடகம்

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் நாள். கடன் சுமை குறையும். தொல்லை தந்தவர்கள் விலக தொலைபேசி வழித் தகவல் உறுதுணையாக இருக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

சிம்மம்

நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

கன்னி

யோகமான நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். நண்பர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்

வழக்குகளில் வெற்றி கிட்டும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாமன், மைத்துனர்கள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர்.

விருச்சிகம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பயணத்தால் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு

அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் காணும் நாள். நேற்றைய பணியொன்று இன்றும் தொடரும். பயணத்தால் எதிர்பாராத சிலரின் சந்திப்பு கிட்டும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.

மகரம்

விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீண் பிடிவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணமொன்றில் பதற்றம், படபடப்புத் தோன்றி மறையும். நண்பர்களுக்காக வெளியிடங்களில் காத்திருக்க நேரிடலாம்.

கும்பம்

தேங்கிக் கிடந்த பணிகளை சிறப்பாகச் செய்து முடிக்கும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் உங்களுக்குக் கைகொடுத்து உதவ முன் வருவர்.

மீனம்

வம்பு, வழக்குகள் தீர வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டிய நாள். அலுவலகப் பணிகளில் சில அல்லல்கள் ஏற்படலாம். நீங்கள் அதிகமாக நேசித்த ஒருவர் உங்களிடம் கோபமாக நடந்து கொள்ளலாம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments