வார ராசி பலன்கள்

Report Print Kalam Kalam in ஜோதிடம்
452Shares

மேஷம்

கேது, சுக்கிரன் நற்பலன் வழங்குவர். எவரிடமும் நிதானித்து பேசுவது நல்லது. தம்பி, தங்கை கேட்ட உதவியை வழங்குவீர்கள். வாகன பராமரிப்பு செலவு குறையும். அவற்றின் மூலம் திருப்திகரமான லாபம் கிடைக்கும். புத்திரர்களின் வளர்ச்சிக்காக திட்டம் திட்டுவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் போட்டி கடுமையாக இருக்கும். பணியாளர்களுக்கு நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பொறுமை தேவை. பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற நண்பர்கள் உதவுவர்.

சந்திராஷ்டமம்: 11.8.16 காலை 11:08 மணி முதல் 13.8.16 இரவு 10:04 மணி வரை.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

ரிஷபம்

பெரும்பாலான கிரகங்கள் நற்பலன் தருவர். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் முன்னேற உதவியவர்களுக்கு நன்றி சொல்வீர்கள். குடும்பத்திற்கு தாராள செலவு செய்வீர்கள். பயணங்கள் இனிய அனுபவம் தரும். புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். பூர்வ சொத்தில் பணவரவு கூடும். கணவன், மனைவி ஒற்றுமையால், குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள இடையூறு விலகும். பணியாளர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவர். பெண்கள் குடும்ப நலனுக்கான திட்டங்களை சரிவர செயல்படுத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: 13.8.16 இரவு 10:04 மணி முதல் அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு, கஷ்டம் போக்கும்.

மிதுனம்

செவ்வாய், சனி, ராகு சுக்கிரனால் நன்மை ஏற்படும். பழகுபவர்களின் மனமறிந்து பேசுவீர்கள். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள். முக்கிய திட்டம் நிறைவேறும். எதிர்ப்பு விலகி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரித்து மனநிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் கூடும். பணியாளர்கள் தொழில் நுட்பங்களை ஆர்வமாக கற்று சலுகை பெறுவர். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். பணம் சேரும். மாணவர்கள் முயற்சியுடன் படித்து முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு, ஐஸ்வரியம் தரும்.

கடகம்

சுக்கிரன், சந்திரன் நற்பலன் தருவர். கடந்த கால அனுபவங்களை கவனத்தில் வைத்து செயல்படுவது பிரச்னைகளைக் குறைக்கும். தம்பி, தங்கைகளின் கருத்தை குறை சொல்ல வேண்டாம். பயணங்களின் எண்ணிக்கை குறையும். புத்திரர்கள், தங்கள் தேவையை நிறைவேற்ற பிடிவாதம் செய்வர். உடல்நலம் தொடர்பான செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இடையூறு ஏற்பட வாய்ப்புண்டு. கல்லாவை, நீங்களே கவனித்துக் கொள்வது நல்லது. பணியாளர்கள் சலுகை பெற அதிக முயற்சி தேவைப்படும். பெண்கள், குடும்ப நலனில் அக்கறை கொள்வர். வாழ்க்கைத் துணைவர் பாசத்துடன் நடந்து கொள்வார். மாணவர்கள் நண்பர்களின் உதவியுடன் படித்து முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு, சகல நன்மையும் தரும்.

சிம்மம்

சூரியன், குரு, சுக்கிரனால் நன்மை நடக்கும். குடும்ப நிகழ்வுகள் இனிதாக அமையும். பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். பயணங்கள் அதிகரிக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். முக்கிய திட்டங்கள் நிறைவேறும். கணவன், மனைவியின் பாசத்தினால், குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு வெகுவாக குறையும. பெண்கள் வீட்டு அலங்கார பொருள் வாங்குவர். மாணவர்கள் முயற்சியுடன் படித்து முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கன்னி

பெரும்பான்மை கிரகங்கள் நற்பலன் தருவர். மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும். பொது இடங்களில் நடக்கும் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உடன்பிறந்தவர்களுக்கு மங்கள நிகழ்ச்சி நடத்த அனுகூலம் உண்டு. வீடு, வாகன வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது நல்லது.

புத்திரர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடந்து கொள்வர். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தந்து முன்னேற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்தை அனுசரித்து, அதிக சலுகை பெறுவர். பெண்கள் குடும்ப நலனுக்காக வீட்டுச் செலவை சுருக்கிக் கொள்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு, மகிழ்ச்சி தரும்.

துலாம்

குரு, சனி, கேது தவிர மற்ற கிரகங்கள், நற்பலன் தருவர். நற்பண்பு நிறைந்தவர்களின் துணையால் முன்னேறுவீர்கள். மனதில் உற்சாகம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வர். வாகன பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்கள் நல்வழியில் செயல்படுவர். குடும்ப விவகாரங்களில் சுமுக தீர்வு கிடைக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை வளரும். தொழில், வியாபாரம் செழித்து லாபம் கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சாதனை புரிவர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

விருச்சிகம்

புதன், குரு நற்பலன் தருவர். வாழ்வில் முன்னேற, புதிய திட்டங்களை வகுப்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். பயணங்களால் அதிக நன்மை இருக்காது. புத்திரர்கள் திறமையான செயல்களால், பெருமை தேடித் தருவர். கடனை அடைக்கும் அளவு வருமானம் இருக்கும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஓவர்டைம் உள்ளிட்ட சலுகைகளால் பணவரவு உயரும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் வேண்டும்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு தைரியம் தரும்.

தனுசு

சுக்கிரன், கேது அதிக நன்மை தருவர். செயல்களை நிதானமாக செய்வீர்கள். உறவினர்கள் பாசத்துடன் நடந்து கொள்வர். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் திட்டங்களை வகுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் ஆதரவு வளர்ச்சி தரும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் தாராள பணவசதி கிடைத்து மகிழ்வர். மாணவர்கள் படிப்புடன் பொது அறிவிலும் மேம்படுவர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு சிரமம் நீக்கும்.

மகரம்

புதன், சுக்கிரன், செவ்வாய், சனீஸ்வரர் நற்பலன் வழங்குவர். பணிகளை கவனமாகச் செய்து பாராட்டு பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். புத்திரர்கள் சிறப்பாக செயல்பட்டு பெருமை தேடித் தருவர். உடல்நிலை நன்றாக இருக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பயணங்கள் இனிய அனுபவம் தரும். தொழில், வியாபாரத்தில் சமயோசித செயலால் பணவரவு கூடும். பணியாளர்களுக்கு நற்பெயர் மற்றும் சலுகை கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வெற்றி தரும்.

கும்பம்

சூரியன், சந்திரனால் நன்மை ஏற்படும். தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். ஒதுக்கி வைத்த பணிகளை நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். புத்திரர்கள் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். பயணத்தின் போது பாதுகாப்பு அவசியம். கணவன், மனைவி பொறுமையுடன் நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பணியில் கவனம் தேவை. பெண்கள் சேமிப்பில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் தான் உயர் மதிப்பெண் பெற முடியும்.

சந்திராஷ்டமம்: 7.8.16 காலை 6:00 மணி முதல் 8.8.16 இரவு 11:08 மணி வரை.

பரிகாரம்: முருகன் வழிபாடு, நம்பிக்கை வளர்க்கும்.

மீனம்

குரு, புதன், ராகு, சந்திரன் நற்பலன் வழங்குவர். உழைப்பிற்கான பலன் திருப்திகரமாக கிடைக்கும். நிம்மதி நிறைந்த வாழ்வு உருவாகும். பயணங்களால் பலன் உண்டு. குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். புத்திரர்கள் விரும்பிய பொருள் கேட்டு பிடிவாதம் செய்வர். வழக்கு விவகாரத்தில் தீர்வு ஏற்படும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி உற்பத்தி, விற்பனை கூடும். பாக்கிப்பணம் வசூலாகும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணிகளை முடித்து நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும். மாணவர்கள் நண்பர்களுடன் இணைந்து படித்து முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்: 8.8.16 இரவு 11:30 மணி முதல் 11.8.16 காலை 11:08 மணி வரை.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments