அதிமுக-ரஜினி கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக தமிழகத்தின் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என நடிகர் ரஜினிகாந்த அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்ததை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் மகிழச்சியடைந்துள்ளனர்.
ரஜினி கட்சித் துவக்குவதற்கு அரசியல் தலைவர்களிடமிருந்து கலவலையான விமர்சனங்கள் வருகின்றன.
இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என தமிழகத்தின் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.
மேலும், அரசியலில் எதுவும் நடக்கலாம், வரும்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு என ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்
அரசியலில் எதுவும் நடக்கலாம், வரும்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு - துணை முதலமைச்சர்