ஜோ பிடன் மீதான டிரம்பின் புகாரை நிராகரித்தார் ரஷ்ய அதிபர் புடின்!

Report Print Karthi in ஆசியா

நவம்பர் மூன்றாம் திகதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, ஜனநாயக கட்டியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகியோர் உக்ரேனில் ஒழுக்கமற்ற நடைமுறைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் டிரம்பின் கருத்து குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை, ஹண்டர் பிடனின் உக்ரைன் அல்லது ரஷ்யாவுடனான கடந்தகால வணிக உறவுகளில் எந்தவொரு குற்றவாளியையும் காணவில்லை என்று கூறியுள்ளார்.

புடினின் இந்த கருத்து அமெரிக்க தேர்தல் களத்தில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் ட்ரம்ப்பை மாஸ்கோவுடன் சிறந்த உறவை விரும்புவதாகக் கூறிய புடின், ரஷ்யா எந்தவொரு அமெரிக்கத் தலைவருடனும் இணைந்து செயல்படுவார் என்று கூறியுள்ளார்,

நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புடின், “ஆம், உக்ரேனில் அவர் (ஹண்டர் பிடென்) ஒரு வணிகத்தைக் கொண்டிருந்தார் அல்லது வைத்திருக்கலாம், எனக்குத் தெரியாது. இது எங்களுக்கு கவலை இல்லை. இது அமெரிக்கர்கள் மற்றும் உக்ரேனியர்களைப் பற்றியது ”என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தவறியதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் போன்ற கடும் நெருக்கடிகள் மேலெழுந்துள்ளன. இதற்கிடையில் அதிபர் தேர்தல் நடைபெறுவதால் இந்த தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்