ஸ்டுடியோவுடன் 70 பேரை உயிருடன் தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்.. ஜப்பானில் பயங்கரம்

Report Print Basu in ஆசியா

ஜப்பானில் உள்ள அனிமேஷன் ஸ்டுடியோவுக்கு மர்ம நபர் ஒருவன் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உஜி நகரத்தில் உள்ள கியோட்டோ அனிமேஷன் கோ நிறுவனத்தின் மூன்று மாடி ஸ்டுடியோவுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. இதில், 10 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மர்ம நபர் ஒருவன், உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில் கட்டிடத்தை சுற்றி பெட்ரோல் போன்ற திரவத்தினை ஊற்றி தீ வைத்துள்ளார். இதையடுத்து அந்த கட்டிடம் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. சம்பவத்தின் போது ஸ்டுடியோவில் 70-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டுடியோவுக்கு தீப் வைத்ததாக நம்பப்படும் 41 வயது நபர் காயமடைந்தவர்களில் ஒருவராக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று பொலிசார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்