தத்தளிக்கும் சீனா...10 லட்சத்துக்கு அதிகமான மக்களுக்கு நேர்ந்த கதி

Report Print Basu in ஆசியா
74Shares

கிழக்கு ஆசியா நாடான சீனாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்நாடு தண்ணீரில் தத்தளித்து வருகிறது.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகம் வெளியிட்டள்ள தகவலில், சீனாவில் கடந்த மாதத்திலிருந்து பெய்து வரும் கனமழைக்கு அந்நாட்டின் தென்பகுதியில் 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹுனான், குவான்சி போன்ற மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுளன. 1000க்கு அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை காரணமாக 390 மில்லியன் டாலர் சீன அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாக உள்ளூர் மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சீன வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்