இணையத்தை கலக்கும் விமான விபத்து வீடியோ..! அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அரசியல்வாதிகள்

Report Print Basu in ஆசியா
144Shares

வீடியோ கேம் விளையாட்டின் வீடியோவை பார்த்து உண்மை என நம்பி, பாகிஸ்தான் அரசியல்வாதிகள் பாராட்டி தள்ளிய சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ சுருக்கமாக ஜிடிஏ என கூறப்படும் வீடியோ கேம் உலகம் முழுவதும் பிரபலமானது. சமீபத்தில், ஜிடிஏ கேமின் புரோமேஷன் வீடியோ ஒன்று வெளியானது. அதில், ஓடு பாதையில் விமானம் வேகமாக வர, திடீரென குறுக்கே டேங்கர் லொறி வந்து நிற்கிறது. கடைசி நொடியில் மயிரிழையில் விபத்து தவிர்க்கப்பட்டு விமானம் பறக்கிறது.

ஜிடிஏ கேமின் கிராபிக்ஸ் எந்த அளவிற்கு தத்துருபமாக இருக்கும் என்பதை வெளிகாட்டும் வகையில் குறித்த வீடியோ இருந்தது.

இந்நிலையில், இணையத்தில் வீடியோவை கண்ட பாகிஸ்தானின் அவாமி தெஹ்ரீக் கட்சியின் பொதுச்செயலாளர் குர்ரம் நவாஸ் காந்தபூர், இதை உண்மை என நம்பி, விமானியை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டார்.

அதில், ஒரு பெரிய பேரழிவில் முடிந்திருக்க கூடிய விபத்திலிருந்து விமானம் மயிரிழையில் தப்பியுள்ளது. விமானியின் திறமையினால் இது தவிர்க்கப்பட்டுள்ளது என பாராட்டி பதிவிட்டார். இதை வேடிக்கையாக பார்த்த பலர் அவரை கிண்டல் செய்து பதிவிட, உடனே சுதாரித்துக் கொண்ட குர்ரம் நவாஸ் காந்தபூர் ட்விட்டை நீக்கினார்.

காந்தபூர் மட்டுமின்றி பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற ட்விட்டர் பக்கமும் இந்த தவறை செய்துள்ளது. உலகின் எந்த விமான நிலையத்திலும் பணிபுரியும் துறைகளுக்கு இடையிலான தவறான ஒருங்கிணைப்பு ஒரு பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என பதிவிட்டுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்