டிவி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் திடீரென செய்த சம்பவம்: திகைத்து போன பார்வையாளர்கள்

Report Print Basu in ஆசியா

பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சி ஒன்றில், நேரலை விவாத நிகழ்ச்சியின் போது திடீரென பங்கேற்பாளர்கள் மல்யுத்த போட்டி போல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பார்வையார்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் "நியூஸ் லைன் வித் அப்தாப் முகேரி" என்ற நேரலை விவாத நிகழ்ச்சியிலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

குறித்த விவாத நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை சேர்ந்த மஸ்ரூர் அலி சியால், மற்றொருவர் கராச்சி பிரஸ் கிளப் தலைவர் இம்தியாஸ் கான்.

நிகழ்ச்சியின் போது இருவருக்கும் இடையே நடந்த விவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது. முதலில் மஸ்ரூர் அலி சியால், நீங்கள் விவாதிக்கும் முறையை என்னால் சகித்துக்கொள்ள முடியாது என இம்தியாஸ் கானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே பாணியில் இம்தியாஸ் கான், மஸ்ரூர் அலி சியாலுக்கு பதிலளித்துள்ளார். இதனால், கோபமடைந்த மஸ்ரூர், திடீரென எழுந்து இம்தியாஸை நற்காலியுடன் தள்ளி விட்டு தாக்க முயன்றுள்ளார். உடனே எழுந்த இம்தியாஸ், மஸ்ரூர் அலியை தாக்கினார்.

உடனே அரங்கத்தில் இருந்த நபர்கள் இருவரையும் தடுத்து சண்டையை நிறுத்தியுள்ளனர். தற்போது, குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers