ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி தாக்கும் அபாயம்

Report Print Basu in ஆசியா

ஆசியா நாடான ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பானின் வடமேற்கு பகுதியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் யமகட்டாவின் சுரோகாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுமார் 3 அடி உயரம் வரை அலைகள் கடற்கரையை தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி எந்த தகவலும் வெளியாகிவில்லை. மேலும், நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களில் எந்த அசாதாரணமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்