பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தனின் நிலை தான் இந்திய அணிக்கு.. வைரலாகும் விளம்பரம்

Report Print Basu in ஆசியா

பாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தனின் நிலை தான் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு என சித்தரிக்கும் பாகிஸ்தான் விளம்பரம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் எதிர்வரும் 16ம் திகதி மான்செஸ்டரில் நடக்கும் 22வது போட்டியில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர் கொள்கிறது.

இதற்கான பாகிஸ்தான் ஊடகத்தில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் வர்த்தமானை இந்திய அணியுடன் ஒப்பிடும் விதமாக விளம்பரம் ஒன்று ஒளிபரப்படுகிறது.

அந்த விளம்பரத்தில் அபிநந்தனை போல மீசை வைத்த தோற்றத்தில் இருப்பவரிடம், உங்களுடைய பெயர் என்ன? எங்கிருந்து வருகிறீர்கள்? டீ எப்படி இருக்கிறது? எனக் கேட்கிறார்கள். அதற்கு பதிலளிக்கும் அவர் டீ கப்பை எடுத்து செல்கிறார்.

அப்போது அவரது தோளில் கைவைத்து, ‘ கப்பை’ வைத்து விட்டு போ எனக் கூறுகிறார்கள். இந்த விளம்பரத்தின் மூலம் கிரிக்கெட்டை சம்பந்தப்படுத்தி, இந்திய அணி பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டது போலவும், இறுதியில் கப் தங்களுடையது. எடுத்து விட்டு போக முடியாது என்பதை போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers