அமெரிக்காவுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்.. உறுதியேற்றது சீனா

Report Print Basu in ஆசியா

அமெரிக்கா வர்த்தக அழுத்தங்களை அதிகரித்ததால், சீனா அதற்கு பதிலடி கொடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ஜெங் ஷுவாங் தெரிவித்துள்ளார்.

யூன் மாத இறுதியில் ஒசாகாவில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சிமாநாட்டில், சீனா ஜனாதிபதி ஜின்பிங் சந்திக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், தற்போது வரை சீனா இந்த சந்திப்பை உறுதி செய்யவில்லை.

கடந்த வாரம் டிரம்ப கூறியதாவது, உலகின் பெரிய பொருளாதார நாட்டு தலைவர்களுடனான சந்திப்பிற்கு பிறகு, சீனா மீது குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர் சுங்க வரி விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ள சீனா ஜனாதிபதி ஜின்பிங் , தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வில்லை என்றால், சீன இறக்குமதி மீது அடுத்தகட்ட சுங்க வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.

ஒசாகாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி ஜின்பிங், டிரம்ப் உடனான சந்திப்பு இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என கூறிய சீனா வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ஜெங் ஷுவாங், இன்னும் அமைச்சகத்திற்கே அத்தகவல் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், வர்த்தக போரை எதிர்த்து நிற்க சீனா விரும்பவில்லை. ஆனால், வர்த்தக போரை எதிர்த்துப் போராடுவதில் எங்களுக்கு பயம் இல்லை. சமத்துவம் அடிப்படையில் சீனாவின் கதவு பேச்சுவார்த்தைகளுக்குத் திறந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers