உலகிலேயே மிகப் பெரிய வெடிகுண்டு தயாரித்த சீனா! அதிர்ச்சியில் உலக நாடுகள்

Report Print Kabilan in ஆசியா

அமெரிக்கா உருவாக்கிய ராட்சத வெடிகுண்டுக்கு போட்டியாக, சீனா தற்போது உலகிலேயே மிகப் பெரிய அணு ஆயுதம் இல்லாத குண்டை தயாரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்கா வீசிய ராட்சத வெடிகுண்டு ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ என்று அழைக்கப்பட்டது.

இதற்கு ஜிபியு-43/பி என பெயரிடப்பட்டிருந்தது. சுமார் 103 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இது 9,800 கிலோ எடையும், 9 மீற்றர் நீளம் மற்றும் ஒரு மீற்றர் விட்டமும் கொண்டதாகும்.

அத்துடன் இந்த வெடிகுண்டு, GPS கருவியின் வழிகாட்டுதலுடன் சென்று இலக்கை தாக்கி அழிக்க வல்லது என்று கூறப்பட்டது. மேலும் 11 டன் வெடிபொருள் ஏற்படுத்தும் சேதத்திற்கு இணையான அழிவை இது உண்டாக்கும்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவும் மிகப் பெரிய வெடிகுண்டை உருவாக்கியுள்ளது. சீனாவின் பாதுகாப்பு துறை இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ராட்சத குண்டு மிகப் பெரிய அளவில் வெடிப்பை ஏற்படுத்தும் என்றும், இது தொடர்பான வீடியோவை சீனா கடந்த டிசம்பர் இறுதி வாரத்திலேயே தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்