புதிதாக திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்

Report Print Deepthi Deepthi in ஆசியா

ஹைதராபாத் நகரில் புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

லோகித் - அஞ்சலி ஆகிய இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியிலும் இவர்களது காதல் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அஞ்சலியிடம் படிப்பை நிறுத்திவிடுமாறு அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

இதனால், பெற்றோரை எதிர்த்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், பூச்சிகொல்லி மருந்தை வாங்கி இருவரும் குடித்துள்ளனர். இதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்