சாமானிய பெண்ணுக்கு வந்த பிரித்தானிய இளவரசர் திருமண அழைப்பிதழ்: காரணம் என்ன தெரியுமா?

Report Print Raju Raju in ஆசியா
811Shares
811Shares
ibctamil.com

இந்தியாவின் மும்பையில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இளம் பெண்ணுக்கு பிரித்தானிய இளவரசர் ஹரி திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

சுஹானி ஜலோடா (23) என்ற பெண் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது தோழிகளுடன் சேர்ந்து மும்பை குடிசை பகுதியில் மைனா மஹிளா என்னும் அரசுசாரா அமைப்பை தோற்றுவித்தனர்.

இந்த அமைப்பின் நோக்கம் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

பல பெண்களின் வாழ்க்கை மேம்பட சுஹானியின் பணி காரணமாக அமைந்திருப்பதோடு, அதற்கான அங்கிகாரமும் அவருக்கு கிடைத்துள்ளது.

இந்த சூழலில், சுஹானிக்கு லண்டனில் நடக்க இருக்கும் அரச குடும்பத்தின் திருமணத்தில் கலந்து கொள்ள திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரி தனது திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களுக்கு திருமண பரிசு தருவதற்கு பதில் ஏழு தொண்டு நிறுவனங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்த ஏழு தொண்டு நிறுவனங்களில் மைனா மஹிளாவும் ஒன்றாகும்.

பெண்கள் மேம்பாடு, சமுக மாற்றம், விளையாட்டு, சூழலியல், எய்டஸ் உள்ளிட்டவற்றில் பணி செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு திருமண அழைப்பிதழ் வந்துள்ளது.

இதையடுத்து ஹரி - மெர்க்கல் திருமணத்தில் பங்கேற்க சுஹானியும் அவரது தோழிகளும் சில தினங்களில் லண்டனுக்கு பயணிக்கவுள்ளார்கள்.

இது குறித்து சுஹானி கூறுகையில், இந்த அழைப்பு எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்