ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி

Report Print Kabilan in ஆசியா
114Shares
114Shares
lankasrimarket.com

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை, வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், அடுத்த தலைமுறைக்கான புதிய அணு ஆயுதங்களை சமீபத்தில் அறிமுகம் செய்தார். அதில் ஒன்று ‘Kinzhal' எனும் ஏவுகணை ஆகும்.

இது அணு ஆயுதங்களை சுமந்தபடி, ஒலியைப் போல 10 மடங்கு வேகத்தில் பயணித்து, 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் வாய்ந்தது.

இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் தென்மேற்கு பகுதியில் சவுத் மிலிட்டரி மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து, ’Kinzhal' ஏவுகணை ஏவப்பட்டது.

MIG 31 Supersonic இடைமறிப்பு விமானத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, திட்டமிட்டபடி வெற்றிகரமாக இலக்கை தாக்கியது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து விளாடிமிர் புதின் கூறுகையில், ‘Kinzhal ஏவுகணை சிறந்த ஆயுதம். இது கடந்த டிசம்பர் 1ஆம் திகதி ராணுவத்தில் சேர்க்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

Russian Defence Ministry/YouTube

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்