சீனாவில் 2.63 லட்சம் பேருக்கு ஊழல் வழக்கில் தண்டனை

Report Print Kabilan in ஆசியா

சீனாவில் 100 அமைச்சர்கள் உட்பட, 2.63 லட்சம் பேருக்கு ஊழல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-17யில் பல்வேறு மட்ட நீதிமன்றங்கள், சுமார் 1.95 லட்சம் ஊழல் வழக்குகளை கையாண்டு தீர்ப்பு வழங்கியுள்ளதாக சீன உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஸூ கியாங்கின் அறிக்கையை சுட்டிக் காட்டி சீன நாடாளுமன்ற இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த தீர்ப்பில், மாகாண மற்றும் அமைச்சக மட்டத்தில் ஊழல் செய்த 101 முன்னாள் அதிகாரிகள், மக்கள் விடுதலை ராணுவத்தின் 100 ஜெனரல்கள் மற்றும் 4,000 ஜெனரல் அதிகாரிகளும் அடங்குவர்.

மேலும், இந்த அறிக்கையில் லட்சக்கணக்கான ஊழல் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனினும், ஜனாதிபதி ஜின்பிங் தனது அதிகாரத்தை நிறுவிக் கொள்ளவே, இத்தகைய செயலைச் செய்து வருவதாக விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

Stephen Shaver/Barcroft Media

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers