தாய்லாந்தில் இருசக்கர வாகன வெடிகுண்டு தாக்குதல்: மூன்று பேர் பலி

Report Print Kabilan in ஆசியா
16Shares

தாய்லாந்து நாட்டில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 22 பேர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டில், அரசுக்கு எதிராக தெற்கு பகுதியில் உள்ள யலா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து, இப்பகுதியில் நடத்தப்படும் வன்முறை தாக்குதல்களால் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்கள் நடமாட்டம் நிறைந்த இப்பகுதியில், இருசக்கர வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 22 காயமடைந்துள்ளனர்.

கடந்த, இரண்டு ஆண்டுகளில் யலா மாகாணத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்