பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் இல்லையெனில் அமைதி நிலவாது: பாலஸ்தீன ஜனாதிபதி எச்சரிக்கை

Report Print Kabilan in ஆசியா

பாலஸ்தீன நாட்டின் ஜனாதிபதி மஹமூத் அப்பாஸ், தங்கள் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அமைதி நிலவாது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சமீபத்தில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பாலஸ்தீன நாட்டின் ஜனாதிபதி மஹமூத் அப்பாஸ், இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘தற்போது பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் உள்ளது. தொடர்ந்து ஜெருசலேமே தலைநகராக நீடிக்கும். அவ்வாறு இல்லையெனில் அமைதியோ அல்லது நிலையான தன்மையோ நிலவாது.

டிரம்ப், அமெரிக்காவின் நகரத்தினை விட்டுக் கொடுப்பது போன்று பேசியுள்ளார். மேலும், மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில், அமெரிக்கா இதுவரை எந்த பங்கும் வகிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்