நகர சபைக்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் கவுன்சிலர்: காரணம் என்ன?

Report Print Kabilan in ஆசியா

ஜப்பானில் குமாம்டோ நகராட்சி உறுப்பினரான யுகா ஒகாட்டோ, அவரது கைக்குழந்தையுடன் பணிக்கு வந்ததால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது குறித்து யுகா ஒகாட்டோ கூறுகையில், ‘நான் எனது நகரத்தின் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜப்பானில் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள், பணிச் சூழலை நட்புறவில் அணுகும் முறையை ஏற்படுத்த

நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன். இந்நிலையில், நான் கருவுற்ற பிறகு, எனது பணியை தொடர்ந்து மேற்கொள்ள எனது சட்டசபையில் அவர்களது உதவியைக் கேட்டேன்.

எனது குழந்தைக்கு பால் புகட்ட தனியாக அறை ஒதுக்க வேண்டும். மேலும், பணியாளர்கள் அவர்களது குழந்தைகளைப் பராமரிக்க தனி அறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினேன்.

ஆனால், எனது திட்டங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. குழந்தைகளுக்கான பராமரிப்பு வசதி குறைபாட்டால் பல பெண்கள் தங்களது பணியைத் தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் நிலைமை இன்னும் மோசமாகிறது. குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் குழந்தைகளை சேர்க்கவும் கடினமான விதிகள் இருக்கின்றன.

பணி இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல நினைத்தாலும், அங்கு முதலாளி, தொழிலாளர்களால் குறை கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பல பெண்கள் கருவுற்ற பிறகு பணியை விட்டுவிடுகின்றனர்.

எனவே தான், பெண்களின் இந்த நிலையை விளக்க, எனது ஏழு மாத குழந்தையை நகர சட்டசபை கூட்டத்துக்கு அழைத்துச் சென்றேன். சபை கூடி 15 நிமிடங்களுக்கு என் மகன் அமைதியாகத்தான் இருந்தான்.

நானும் நம்பிக்கையாக அமர்ந்திருந்தேன். அப்போது சபை ஊழியர் ஒருவர் ஓடி வந்து இப்படி செய்யாதீர்கள் எனக் கூறினார். எனது குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே போகும்படி கூறினார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் வெளியேற முடியாது. சபையைத் தொடர்ந்து நடத்துங்கள் என்று அவர்களிடம் கூறினேன். எனினும் நான் வெளியேறினேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்