தங்கையை தோளில் சுமந்து அகதியாய் சிறுவன்! உலகை உலுக்கிய புகைப்படம்

Report Print Deepthi Deepthi in ஆசியா

மியான்மரை சேர்ந்த யாஷரின் என்ற சிறுவன் தனது தங்கையை தோளில் சுமந்தபடி வங்கதேசம் சென்றடைந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

மியான்மரில் சிறுபான்மையினரான ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவர்கள் பாதுகாப்பு கருதி அண்டைய நாடான வங்கதேசத்துக்கு செல்கின்றனர்.

யாஷரின் என்ற சிறுவனின் தந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மியான்மரில் வசிக்க முடியாத நிலையில் தாய் பிரோஷா பேகம் குழந்தைகளுடன் வங்கதேசத்துக்கு சென்றுள்ளான்.

தாயின் தலையில் மூட்டை முடிச்சுகள் இருந்தது. இதனால், யாஷரின் தங்கை நோயிம் பாத்திமாவை இடுப்பில் சுமந்தவாறு நடக்க அவர் சிரமப்பட்டார். தாயின் சிரமத்தை அறிந்து கொண்ட யாஷர், தங்கையை தன் தோளில் சுமந்து கொண்டான்.

தங்கையை சுமந்தவாரே சகதி நிறைந்த பாதை, வயல்வெளிகள், ஆறுகளை கடந்து இரு வாரங்கள் கழித்து வங்கதேசத்துக்கு அக்டோபர் 2ம் தேதி வங்கதேசம் சென்றடைந்துள்ளான்.

பள்ளி சீருடையில் வங்கதேசத்துக்குள் நுழைந்த சிறுவனைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சிறுவனின் குடும்பத்துக்குத் தேவையான வசதிகளை செய்து தந்தனர். தற்போது, வங்கதேசத்தில் உறவினர்களிடம் யாஷர் குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.

தங்கையை சுமந்தவாறு, சகதி நிறைந்த பாதைகளில் யாஷர் நடப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்