உயிரியல் பூங்காவில் கரடியிடம் மாட்டி சிக்கித் தவித்த நபர்! அதிர்ச்சி வீடியோ

Report Print Jubilee Jubilee in ஆசியா

சீனாவில் உயிரியல் பூங்கா ஒன்றில் நபர் ஒருவர் பாண்டா கரடியிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு வந்த நபர் ஒருவர் பாண்டா கரடியின் இருப்பிடத்திற்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 120 கிலோ எடையுள்ள ஆண் கரடியை அவர் சீண்ட ஆரம்பித்தார்.

இந்நிலையில் விழித்துக் கொண்ட கரடி வேகமாக வந்து அவரது காலை பிடித்துக் கொண்டது.

இதனால் அவர் அதிர்ச்சியில் அலற ஆரம்பித்தார். அவர் எவ்வளவு போராடி பார்த்தும் கரடி அவரை விடுவதாக இல்லை.

சுமார் 5 நிமிட போராட்டத்திற்கு பின்பு தன்னை விடுவித்துக் கொண்ட அந்த நபர் அங்கிருந்து ஓடியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், பாண்டா அந்த நபருடன் விளையாடவே செய்தது. ஆனால் அந்த நபர் தான் கதறி அழுதுள்ளார். இது சிசிடிவி காட்சியில் நன்றாக பதிவாகியுள்ளது என்றனர்.

உயிரியல் பூங்காவில் நபர் ஒருவருடன் பாண்டா கரடி ரெட்ஸ்லிங் விளையாடி இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments