சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உயிருக்கு போராடிய குழந்தையை நபர் ஒருவர் ஸ்பைடர்மேன் போன்று செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.
Liaocheng நகரில் அமைந்துள்ள குடியிருப்பின் மூன்றாவது மாடியின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை தடுமாறி கம்பியின் இடையே சிக்கியுள்ளது.
இதில், அக்குழந்தையின் தலை மட்டும் கம்பியில் சிக்கிகொண்டு, உடல் கீழ் நோக்கி தொங்கியுள்ளது. அருகில் வசித்த Liang என்பவர் குழந்தையின் விபரீத நிலையை அறிந்து, ஸ்பைடர் மேன் போன்று சுவர்களில் தாவிச்சென்று அக்குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளார்.
இவர் அக்குழந்தையை மீட்கசெல்கையில், அவருக்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக, குடியிருப்புவாசிகள் சிலர், ஒரு கம்பளத்தை பிடித்துக்கொண்டு கீழே நின்றுள்ளனர்.
ஆனால், இந்நபர் சாதுர்யமாக செயல்பட்டு அக்குழந்தையை மீட்டுள்ளார். இதுகுறித்து Liang கூறியதாவது, குழந்தையின் அழுகுரல் கேட்டுத்தான் அவன் ஆபத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன். அவனின் அருகில் சென்றதும் அவனுடைய கால் பயங்கரமாக நடுங்கியது.
இதிலிருந்து, அக்குழந்தை கீழே விழப்போகிறது என்பதை அறிந்து, அவனை அப்படியே தூக்கிகொண்டு நானும் பால்கனிக்கு சென்றேன் என்று கூறியுள்ளார்.
இச்சம்பவம் நடைபெற்றபோது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. திரும்பி வந்த இவர்கள், நடந்தவற்றை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்கள் குழந்தையை காப்பாற்றிய Liang- க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.