பாலியல் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்குங்கள்: அரசு அதிரடி உத்தரவு

Report Print Peterson Peterson in ஆசியா

இந்தோனேசியா நாட்டில் குழந்தைகளிடம் பாலியல் தாக்குதல் நடத்தியது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கும் புதிய சட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தோனேசியா நாட்டில் சிறுமிகள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் சுமித்திரா தீவுப்பகுதியில் 14 வயதான சிறுமி ஒருவர் 7 வாலிபர்களால் கூட்டு கற்பழிப்பு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இக்குற்றத்தில் ஈடுப்பட்ட 7 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இச்சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில் ஜனாதிபதியான Joko Widodo சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில், சிறுமிகள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளுக்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறை அல்லது மரண தண்டனை அல்லது ஆண்மையை நீக்கும் தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் இரண்டு ஆண் விதைகளும் இராசயனத்தை செலுத்துவதன் மூலம் நீக்கப்படும்.

மேலும், பாலியல் உணர்வுகளை தூண்டும் ஆண்களுக்குரிய டெஸ்டோஸ்டிரோன்கள் நீக்கப்பட்டு பெண்களுக்குரிய ஹார்மோன்கள் குற்றவாளியின் உடலுக்குள் செலுத்தப்படும்.

பாலியல் குற்றங்களுக்கு ஆண்மையை நீக்கும் இதுபோன்ற கடுமையான சட்டங்கள் போலந்து, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா உள்ளிட்ட சில மாகாணங்களில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments