பிரபல பூனைக்கு சிலை வைத்த துருக்கி அரசு

Report Print Steephen Steephen in ஆசியா

துருக்கி மக்களின் அன்பை வென்ற “டொம்பிலீ“ என்ற பூனையை நினைவுகூரும் வகையில், அந்நாட்டின் இஸ்தம்புல் நகரில் பூனைக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

டொம்பிலீ துருக்கி மக்கள் மத்தியில் மாத்திரமல்ல உலக மக்களின் கவனத்தை பெற்றிருந்தது.

இந்த பூனையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தமை இதற்கு காரணம்

டொம்பிலீ ஒரு கனவானை போல் ஒரு பக்கமாக சாய்ந்து அமர்ந்திருக்கும். பூனை இருந்த இடத்தில் அது அமர்ந்திருந்ததை போலவே சிலையும் வடிக்கப்பட்டுள்ளது.

டொம்பிலீ கடந்த ஆகஸ்ட் மாதம் இறந்து போனது. அது இறந்த செய்தியை அறிந்த இணையத்தளங்களை பார்வையிடும் நபர்கள் அதற்கு சிலையை வைக்குமாறு துருக்கி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

17 ஆயிரம் துருக்கி மக்களின் கையெழுத்துடன் கிடைத்த கடிதம் ஒன்றை அடுத்து துருக்கி அரசாங்கம் இந்த பிரபல பூனைக்கு சிலையை அமைத்தது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments