குட்டி தேவதை வந்து ஒரு மாசம் ஆச்சு: வித்தியாசமாக கொண்டாடிய தந்தை

Report Print Raju Raju in ஆசியா

பொதுவாக குழந்தைகள் பிறந்த தினத்தை பெற்றோர்கள் வீட்டில் உறவினர்களை அழைத்தோ, அல்லது வெளியில் உணவகத்துக்கு சென்றோ கொண்டாடுவார்கள்.

ஆனால் ஒரு தந்தை தன் குழந்தை பிறந்த ஒரு மாதத்தை மிக அற்புதமாக கொண்டாடியுள்ளார்.

Xu Yayun என்னும் நபர் சீனாவில் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிந்த நிகழ்வை வித்தியாசமாக கொண்டாட நினைத்தார்.

அதன் படி தன் உறவினர்களை வெட்டவெளியான ஒரு இடத்துக்கு வரவழைத்தார். அங்கு பிங்க் நிறத்தில் மேற்கூறை போடப்பட்டது.

பின்னர் அவர்கள் ரிமோட் மூலம் இயக்க, அங்கு பல ஆளில்லா விமானங்கள் பறந்தன, இது அங்குள்ள எல்லோருக்கும் சந்தோஷமாகவும், மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைந்தது.

இந்த காட்சிகள் பின்னர் இணையத்தில் பகிரப்பட்டது. இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதமான விமர்சனங்களை கூறினார்கள்.

ஒருவர் கூறுகையில், இது கொண்டாட்டதுக்கான சூப்பரான ஐடியா என கூறியுள்ளார்.

இன்னொருவர் கூறுகையில், தங்கள் பணத்தின் பெருமையை வெளிகாட்ட இதை நிகழ்த்தியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments