பெண்களை தேடி கொலை செய்யும் சைக்கோ வாலிபர்: காரணம் என்ன?

Report Print Arbin Arbin in ஆசியா
382Shares

பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் தனது இரண்டாவது தாய் தன்னை கொடுமைபடுத்தியதால் பெண்களை எல்லாம் கொலை செய்ய முயற்சிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொகமது அலி(22), இவர் சிறு வயதில் இருக்கும் போதே இவருடைய தாயார் இறந்து விட்டார். இதன் காரணமாக இவரது அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவரோ மொகமது அலியை தன் மகன் போல் பார்க்காமல் கொடுமை படுத்தி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அலி உலகில் உள்ள எல்லா பெண்களும்(அலியின் இரண்டாவது தாய்) இவர் போல் தான் இருப்பார் என கருதி, தன் தெருவில் வரும் அனைத்து பெண்களையும் கடந்த ஜனவரி மாதம் முதல் கத்தியால் தாக்கி வந்துள்ளார்.

இதில் 17 பெண்கள் பலத்த காய்ங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்த ஒரு செவிலியரை கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார்.

இதில் அவருக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது, பெண்கள் அத்தெருவின் வழியே வந்தால் தாக்குதல் தான் என கூறப்படுகிறது.

பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இவற்றில் பெரும்பாலும் இஸ்லாமபாத்தின், ராவல்பிண்டி தெருக்களில் உள்ள பெண்களே அதிகம் தாக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments