சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜியாங்சூ மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளியினால் 98 உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளதுடன் 800 பேர் வரை காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மணிக்கு 125 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசிய காற்றினால் உடமைகளுக்கும்,பொருட்களுக்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர வெள்ள அனர்த்தத்தினால் 2,00,000ற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் கடைத் தொகுதிகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்திருப்பதனால் அத்தியாவசியப் பொருட்களும் பழுதடைந்து வருகின்றன.
இது தொடர்பாக சீனாஅரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இன்றைய தினம் மீட்பு பணியாளர்கள் முழுவீச்சில் செயற்பட்டு இறந்த உடலங்களையும், காயப்பட்டவர்களையும் மீட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்
கூடாரங்கள் மற்றும் ஏனைய அவசரகால பொருட்கள் பெய்ஜிங்கில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.