ரமழான் மாதம் முடிந்ததும் 16 கைதிகளுக்கு மரண தண்டனை: இந்தோனேஷியா அரசு முடிவு

Report Print Peterson Peterson in ஆசியா

இந்தோனேஷியா நாட்டில் ரமழான் மாதம் முடிவடைந்த பிறகு 16 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அரசு முதன்மை சட்ட அலுவலக செய்தி தொடர்பாளரான முகமது ரம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், ரமழான் மாதம் நிறைவு பெற்றதும் 16 கைதிகள் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்தோனேஷியாவில் ரமழான் மற்றும் Eid al-Fitr விடுமுறை அடுத்த மாதம் 6 மற்றும் 7ம் திகதிகளில் முடிவு பெறுகிறது.

இந்த திகதிக்கு பிறகு, எந்த நேரத்திலும் 16 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இந்தோனேஷியா நாட்டில் போதை மருந்து கடத்துவதால், அந்நாட்டு பொருளாதாரம் பலவீனமாவதை தடுப்பதற்காக அக்குற்றங்களுக்கு அரசு மரண தண்டனை விதித்து வருகிறது.

ஐ.நா மன்றம் உள்ளிட்ட பல உலக மனித உரிமைகள் அமைப்புகள் இந்தோனேஷியா அரசின் இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments