பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: மன்னிப்பு கோரிய புடின்!

Report Print Arbin Arbin in ஆசியா
பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: மன்னிப்பு கோரிய புடின்!

பிரபல அமெரிக்க வங்கியான கோல்டுமேன் சாக்சுக்கு சொந்தமானது தான் ஜேர்மன் நாளேடான Sueddeutsche Zeitung என தவறான தகவலை அளித்தமைக்காக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் தொலைப்பேசி உரையாடலின் போது புடின் இந்த தகவலை வெளியிட்டார்.

உலக நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்திய பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தை வெளியிட்டது மேற்குறிப்பிட்ட கோல்டுமேன் சாக்ஸ் வணிக நிறுவனம் தான். இதனையடுத்தே அதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஜேர்மன் நாளேடான Sueddeutsche Zeitung வெளியிட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவலை தெரிவித்துள்ளதற்கு மன்னிப்பு கோரியுள்ள புடின், தமது அதிகாரிகள் தயாரித்து வழங்கிய அறிக்கையில் பிழை இருந்துள்ளதை ஒப்புக்கொண்டார்.

ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருங்கிய தொடர்புடையவர்களின் பெயர்களும் பனாமா விவகாரத்தில் வெளியானது. ஆனால் அவை அனைத்தும் கட்டுக்கதை எனவும், ரஷ்யாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க எதிரணியினர் சதி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments