சட்டவிரோதமாக தடுப்பூசிகளை விற்பனை செய்த 357 அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை

Report Print Peterson Peterson in ஆசியா
சட்டவிரோதமாக தடுப்பூசிகளை விற்பனை செய்த 357 அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை

சீனாவில் சட்டவிரோதமாக நோய் தடுப்பூசிகளை விற்பனை செய்ய உதவியை மருத்துவ துறை சார்ந்த அரசு 357 அதிகாரிகளின் பணி பறிக்கப்படுவதுடன் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவது என்பது மிக முக்கியமானது ஆகும். இதன் மூலம் எதிர்காலத்தில் கொடுமையான நோய்களை தடுக்க முடியும்.

ஆனால், ஒட்டு மொத்த சீனாவும் அதிர்ச்சி அடையும் வகையில் அந்நாட்டில் சட்டவிரோதமாக தடுப்பூசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தற்போது அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் குற்றசாட்டுக்கு உள்ளாகிய சுமார் 59 மருத்துவ நிறுவனங்கள் இந்த சட்டவிரோத செயலில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது, லாப நோக்கத்திற்காக தடுப்பூசிகள் பதுக்கப்பட்டு அதனை காலதாமதமாக விற்பனை செய்து லாபம் அடைந்துள்ளனர்.

காலாவதியான தடுப்பூசிகளை போடுவதால், அது குழந்தைகளுக்கு எவ்வித நலனையும் ஏற்படுத்தாது. அதாவது, எதிர்காலத்தில் அவர்களுக்கு நோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது.

கடந்த 5 ஆண்டுகளாக ரகசியமாக இருந்த இந்த விவகாரம் கடந்த மாதம் வெளிச்சத்திற்கு வந்து அரசாங்கத்தையும் பொதுமக்களையும் உலுக்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் சுமார் 88 மில்லியன் டொலர் மதிப்பிலான தடுப்பூசிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 2 பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய 357 மருத்துவ அதிகாரிகளின் பணி பறிக்கப்படுவதுடன் அவர்களுக்கு கடுமையான தண்டனையும் விதிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments