கடவுள்!-மனதில் தோன்றியது

Report Print Abhimanyu in கட்டுரை

இந்த அண்டசராசரத்தில் மனிதனின் மிக மோசமான கண்டு பிடிப்பு எது என்று யாராவது கேட்டால், அதற்கு விடை யார்தான் சொல்வர்!

என்னைக் கேட்டால் இவ்வுலகில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட எவ்வித சக்தியும் பெரியதில்லை என்பேன். பதில் கடவுள்தான் ! அதற்கும் தகுந்த காரணம் உண்டு

கடவுள் என்ற ஓர் தோற்றப்பாடு தோன்றுவதற்கு சில முக்கிய வெளிச்சபாடுகள் கட்டாயம் நிகழ்ந்திருக்கும்.

உண்மையிலேயே முதன் முதலாக மனிதன் கிரகணங்களை பார்க்கும்போது எவ்வாறான சிந்தனையை மேற்கொண்டிருப்பான்.அவனது மனக்கண்ணாடி எவ்வாறு காணபட்டிருக்கும்.கிரகணத்தை பற்றிய விளக்கம் இல்லாதவிடத்து அதனை எவ்வாறு புரிந்துகொள்வான்.சற்று முன்னர் வரை இருந்த சூரியன் சில நொடிகளில் இல்லாமல் போனால் பயம் கொள்வது இயல்புதான். இதற்கு மிகச் சிறந்த ஊதாரணமாக 2004 இல் ஏற்பட்ட சுனாமியைச் சொல்லலாம்.

அறிவியல் யுகத்தில் வசிக்கும் மனிதனாலேயே அச் சுனாமி ஏற்படுத்திய இயலாமையை ஏற்றுக்கொள்ள முடியாத போது, நாகரீகத்தின் ஆரம்ப கருபொருளில் இருந்த மனிதன் என்ன செய்திருப்பான்?

அவர்களுக்கான தலைவனிடம் முறையிட்டிருப்பார்கள்.பாவம் அவன் என்ன செய்வான் அவன் என்ன விஞ்ஞானியா?இவை யாவற்றையும் முன்கூட்டியே அறிய..

இவ்விடத்தில் தான் கடவுள் என்னும் தோற்றப்பாடின் ஆரம்ப விதை விழுந்திருக்க வேண்டும். அதிகால மனிதன் இயற்கையை வழிபட ஆரம்பித்ததும் இப்படித்தான். அதாவது, தம்மை பாதிக்கும் இயற்கையை வழிபடுவதன் மூலமே அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். என்ற எண்ணகருவை கொண்டான்.

கடவுள்களின் பெயராலும், மூட நம்பிக்கைகளாலும், அறியாமையாலும் மதங்கள் இவ்வுலகை இப்படித்தான் ஆளத் தொடங்கின. மதங்களின் ஆட்சி உச்சம் பெற்றிருந்த காலங்களில் இப்பூமி தட்டையானது எனவும்,தம் மதங்களிற்கு ஏற்றாற்போல் நாகப் பாம்பு, ஆமை,யானைகள், போன்றனவே இப் பூமியைத் தாங்கி நிற்பதாகவும், சூரியனே இப்பூமியைச் சுற்றிவதாகவும் கூறப்பட்டது இன்னும் பல விதமாகவும் இவற்றை நம்பி வந்தார்கள் அல்லது மதத் தலைவர்களால் நம்ப வைக்கப்பட்டார்கள். மாற்றுக் கருத்தை வெளியிட்டவர்கள் கொல்லப் பட்டனர்.

இன்று கடவுளை மறுப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள், மறுப்பதற்கு பெரியார் தொடங்கி பெருவெடிப்பு (big bang) வரையிலான ஆயிரமாயிரம் காரணங்களை கூறுவர்.

இன்றைய நிகழ்கணிப்பில் கடவுள் நம்பிக்கைகான காரணங்கள்

01.அறியாமை : என்ன தான் அறிவியல் இன்று இந்த அளவிற்கு முன்னேற்றத்தை கொண்டிருந்தாலும் அதைப் பற்றி சிறிதும் அறியாமல், முன்பு வாழ்ந்த, கற்பனையில் சிறந்த படைப்பாளிகளின், அளவுக்கதிகமான, அதீதமான கடவுள்கள் பற்றிய படைப்புக்களை முழுதாக நம்பி, கடவுள் புராணங்களையே பாடிக் கொண்டிருப்பது.

02.இயலாமை : மனித சக்திக்கு அப்பாற்பட்டு வரும் துன்பங்கள் யாவற்றுக்கும் தீர்வு தரக் கூடிய ஒன்றாக கடவுளை காலங்காலமாக நம்பி வந்தமை, அந்த நம்பிக்கையை வேறு வழியின்றி இன்றும் தொடரசெய்தல்.

03.கடவுளின் சித்தாந்தம் : கடவுள் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு எதிர்த்துக் கேள்வி கேட்காத, சொன்னதைச் செய்யும் முட்டாள் மக்கள் தேவை.எனவே அவர்களை மூளைச்சலவை செய்து எப்போதும் தம் சொல் கேட்கும் படி வைத்திருக்க வேண்டியுள்ளது

04.சமூக அமைப்பினால் ஏற்பட்ட விதி : மனிதன் ஒர் சமூக விலங்கு. அவனுக்கு சமூக அமைப்பு இன்றியமையாதது. கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஆதரித்தால் எங்கே தான் குறித்த சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விடுவோமோ என்கின்ற பயம் காரணமாக அமையலாம்.

05.பரம்பரை வழிவந்த வழக்கம் : காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக, கடவுளைத் வணங்கி வருவதால் என்னவோ (ஜீன்கள் மூலம் கடத்தப்படும் பழக்கம்) ஏன் செய்கிறோம். என்று தெரியாமலே பழகிப் போன ஒர் பழக்கத்திற்காக செய்வது.

“இன்றும் நுழைந்துவிட்டன

மனிதமுகம் மாட்டிய சாத்தான்கள்

தேவாலயம் முழுவதுமாய்..."


மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments