விக்டோரியா ராணியின் அந்தரங்க ஆதாரங்கள்! அம்பலமான உண்மைகள்

Report Print Maru Maru in கட்டுரை

ஐக்கிய ராஜ்ஜியத்தின் ராணி விக்டோரியாவுக்கு பலருடன் செக்ஸ் தொடர்பு இருந்ததும் அவர் விஸ்கி, போதைப்பொருள், ஆபாச பேச்சுக்களில் மகிழ்ந்து கிடந்ததும் வெளியாகி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சீரியலில் சொல்லப்படுமா?

ஐ டி.வி.யில் விக்டோரியா ராணியின் வாழ்க்கை பற்றிய நாடகத் தொடரில் நடிகை ஜென்னா கோல்மேன் நடித்திருக்கிறார். இதில் ராணியின் இளம் வயது வாழ்க்கையில் அவருடைய செக்ஸ் சம்பந்தப்பட்ட அபிலாஷைகள், போதைப் பழக்கங்கள் உட்பட்ட குணங்கள் எப்படி சொல்லப்படுகிறது என ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.

யாரும் கேள்வி கேட்கமுடியாத ஒரு அனுபவிப்பாளர். காதலும் கட்டுக்கடங்காத காமமும் அதற்கு தூண்டுதலான விஸ்கி, கோகைன் போன்ற போதைப்பொருள் பழக்கமும் முதல் விக்டோரியா ராணிக்கு இருந்துள்ளது.

அவருடைய குணாதிசயங்களை கடிதங்கள், சில புகைப்படங்கள், ஓவியங்களில் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தான் புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் நாங்கள் உல்லாசமாக காலம் கழிக்கவில்லை என்று கூறியும் இருக்கிறார். அவர் பின்னாளில் அதை மறுத்தும் இருக்கிறார்.

ராணியின் அரண்மனை கதவுகளுக்கு உள்ளே செக்ஸ், போதைப்பழக்கம் தொடர்பான அலறல்கள் இருந்துள்ளதை வரும் அதிர்ச்சி தகவல்கள் உறுதிப்படுத்தவே செய்கிறது.

ராணியின் அந்தரங்க லீலை ஆதாரங்கள்

ஆல்பர்ட் மீது மோகம்: கமாண்டோவான ஆல்பர்ட் மீது விக்டோரியாவுக்கு ஒரு பார்வை இருந்துள்ளது. ராணி தனது 20 வயதில், ஆல்பர்ட் எவ்வளவு அழகாக இருக்கிறார். குறிப்பாக மேலாடையாக மட்டும் அணியும் ஒரு வெள்ளை உடையில் அவர் அழகை தான் அப்படி ரசித்து டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு, அவரோடு ரகசிய திருமணம் நடந்தது. அதனால், அவருக்கும் ராணியின் அந்தரங்க இளவரசர் என்ற பெயர் குத்தப்பட்டது.

ஆல்பர்ட்டுடன் திருமணம் நடந்த பிறகு, அவருக்கு விக்டோரியா ஒரு ஆபாசமான கடிதத்தை எழுதினார். அதில் ‘ரொம்ப திருப்தியாகவும் மலைக்க வைக்கும் அனுபவமாகவும் இருந்தது’ என திருமண நாள் இரவு பற்றி குறிப்பிட்டிருந்தார்.

ஆல்பர்ட் அப்போது பிடிப்பான கால்சட்டைகள் போடுவது நிறுத்த வலியுறுத்தப்பட்டது. ராணியின் நெருக்கத்தை குறைப்பதற்காக என 1970 களில் டக் மல்லாய் என்ற அரண்மனை மெய்க்காப்பாளர் கூறியது இப்போது அதாரமற்றுப் போனது.

1840 ல் விக்டோரிய ராணிக்கு திருமணம் நடந்த சமயத்தில் ஓஸ்பர்னே ஹவுஸின் படுக்கை அறையில், பட்டனை அழுத்தியவுடன் அறையின் எல்லா கதவுகளும் மூடிக்கொள்ளும் அமைப்பு பொருத்தப்பட்டது.

தம்பதி இருவரும் யாருடைய தொந்தரவும் இல்லாமல் மணிக்கணக்காக இருந்துள்ளனர். அடிக்கடி அந்த பட்டன் இப்படி பயன்படுத்தப்பட்டது. பணியாட்கள் கூட உள்ளே செல்ல முடியாமல் போனாலும் உள்ளே என்ன நடக்கும் என யூகம் இருக்கும் தானே.

ராணியின் 38 வயதில், 10 வது குழந்தை பெற்றுக்கொள்வது உடம்புக்கு நல்லது அல்ல என்று அவருடை டாக்டர் எச்சரித்துள்ளார். அதற்கு ராணி ’படுக்கை அறையில் எனக்கு எந்த வேடிக்கையுமே இனி இல்லையா?’ என டாக்டரை வேண்டியுள்ளார்.

போதைக்கு அடிமை

விக்டோரியா மருத்துவ அமைச்சரவையில் ஓபியம் ஒரு வலி நிவாரணியாக அனுமதிக்கப்பட்டிருந்தது. லாந்தனம் மற்றும் ஓபியம் ஆல்கஹாலில் கரைக்கப்பட்ட ஒரு மருந்து, இருமல், டயரியா மற்றும் இதய வலிக்கு பயன்பட்டது. அதனால், அங்கு போதைப்பொருள் வினோதமாக பார்க்கப்படவில்லை.

விக்டோரியா நரம்பு மற்றும் தசை மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய சக்தியளிக்கும் டானிக் போன்ற ’சூயிங் கம்’ பயன்படுத்தினார். சாராயமும் கோகைனும் கலந்த ஒரு பானம் ’வின் மரியானி’ என அழைக்கப்பட்டது. அதுவே விக்டோரியா அதிகம் பயன்படுத்திய மது.

அந்த மதுவை போப்ஸ் 1900 களில் குடித்தார். அதற்காக வடிக்கனிலிருந்து தங்கப்பதக்கமும் பெறப்பட்டது.

சர்ச்சிலுக்கு விருந்தளித்தார்

வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராகும் முன் பால்மோரலில் விக்டோரியா அவருக்கு விருந்தளித்தார். அங்கு அவர்களிடையே உல்லாச பகிர்வும் இருந்தது.

ராணி இளம் வயதில் விருந்துகளில் சமூகத்தில் தனது நிலையை மறந்து மது அருந்துவது, இளைஞர்களுடன் முரட்டுத்தனமான ஜோக்ஸ் மற்றும் கேலிப்பேச்சுகளில் மகிழ்வதும் தன்னை அசிங்கப்படுத்திக்கொள்வது போன்ற சர்க்கஸ்தனமான நடைமுறையில் பலமுறை ஈடுபட்டுள்ளார்.

சிரிப்பால் ஈர்த்த ஜான் ப்ரவுன் ஆல்பர்ட் இறந்த பிறகு, விக்டோரியா அவருடைய ஹைலேண்ட் உதவியாளர் ஜான் ப்ரவுனுடன் நெருங்கிப் பழகினார். அவருடைய சிரிப்பும் அப்படிப்பட்ட பேச்சுமே கவர்ந்ததாக ராணி கூறினார்.

ராணியின் சொந்த மகள்கள் அம்மாவின் காதலர் என்றே அழைத்தனர். ஒரு கிராம புரோகிதர் இருவருக்கும் ரகசியமாக திருமணம் செய்துவைத்ததாக கூறியுள்ளார்.

பிறகு, ப்ரவுனும் இறந்தார். அப்போது ‘இரண்டாவது முறையாக என் வாழ்க்கையில் கஷ்டத்தையும் தாங்க முடியாத வருத்தத்தையும் கொடுத்த துக்கம்’ என்று கூறினார்.

ஆனால், அதன்பிறகும் 68 வயதிலும் நிறுத்தவில்லை. அப்துல் கரீம் (24) என்ற முஸ்லீம் பணியாளருடன் அவருடைய அந்தரங்க வாழ்க்கை தொடர்ந்தது. வெளிப்படையாகவே கடித தொடர்புகளும் இருந்தன.

விக்டோரிய ஜனவரி 22, 1901 ல் இறந்தார். அதன்பிறகு, ராணியின் மகனால், அப்துல் கரீம் அழிக்கப்பட்டார்.

ராணி செக்ஸ் பைத்தியமாக இருந்த இன்னொருவர் அவருடைய மாமா 4ம் வில்லியம். இந்த லீலை 1830 ல் நடந்தது. ராணியின் மடிக்குள் மறைந்திருக்கும் ஆண்களின் அந்தரங்கங்கள் உலுக்கினால் புளியம்பழங்களாய் இன்னும் உதிரும் என்கிறது இந்த பதிவு.

அத்தனையும் கட்டுக்கதை இப்போது இல்லாத யாரோ முன்பு பரப்பிய வதந்தி என்கிறது விக்டோரியாவின் தரப்பு

குடும்பமே குளறுபடி

விக்டோரியாவின் இன்னொரு மாமா மது, சூது பழக்கமுடைய 4ம் ஜார்ஜ் தனக்கு வாரிசு இல்லாதவர். ஆனால், முறையற்ற இரண்டு வாரிசுகள் அவருக்கு இருந்தது.

விக்டோரியாவின் வாரிசுகளும் அவர் குணத்தை பிரதிபலித்தன. வேலஸின் இளவரசர் 7ம் எட்வர்ட், 21 வயதில் திருமணம் நடப்பதற்கு முன்பும் பின்பும் பல காதலிகளை வைத்திருந்தார். அவர்களில் சர்ச்சிலின் அம்மாவும் ஒருவர்.

விக்டோரியாவின் பேரன் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் உண்மையான கறுப்பாடு என்கின்றனர். இதுபோல அவர் குடும்பத்தினரில் பெரும்பாலானவர்களுக்கு பல முறைகேடான தொடர்புகள் உண்டு.

உலுக்கும் உணர்ச்சிகள்

பிரபலங்கள் புற வாழ்க்கையை பதவி, அந்தஸ்து வயதுக்கு ஏற்ப அமைத்துக்கொள்கின்றனர். ஆனால், அக வாழ்க்கை ஒருவருடைய உள்ளுணர்வின் தாக்கங்களுக்கு ஏற்ப அமைவது.

அதனால், அந்தரங்கம் என்ற ஒரு பகுதி அவர்களுடைய வாழ்க்கையில் பாதியாக மாறுகிறது. அது ஆத்ம திருப்தியின் வடிகாலாகவே அவர்களை மண்டியிட வைத்துவிடுகிறது.

பிறருக்காகவே வாழ்ந்தாலும் தனக்கான ஒரு இளைப்பாறுதலை செய்தே தீரணும். இல்லாவிட்டால், அந்த உணர்வோடு இறுதிவரை போராடியே தீரணும்.

விக்டோரியா ராணி பற்றிய ரகசியங்கள் இப்போது வெளியானாலும், உணர்ச்சிகளை படிக்க தெரிந்தவர்களின் கணிப்பில் எப்போதோ இந்த பொறி விழுந்ததுதான்.

தியாகிகளில் கூட, வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டோமோ என மரணப்படுக்கையில் சிலர் நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அத்ம திருப்திக்காக வாழ்ந்தவர்களிடம் அது இருக்காது. தன்னை குறை பேசும் சமூகத்திடம்தான் மாற்றத்தை எதிர்பார்த்து வருந்துவார்கள்.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments