பேராசிரியர் நிர்மலாதேவியை சிறைக்குள் கொலை செய்யும் திட்டமா?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதாகி தகுந்த ஆதாரம் இல்லாமல் விடுதலையாகியுள்ள நிலையில் நக்கீரன் செய்திகளின் ஆதாரம் பேராசிரியை நிர்மலாதேவி.

ஆகையால் தான் பேராசிரியர் நிர்மலாதேவியை சிறைக்குள் வைத்து எந்த நிமிடமும் கொல்லப்படலாம் என்றொரு தகவல் கிடைத்துள்ளது.

அண்மையில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நக்கீரனில் வெளியான அட்டைப்பட கட்டுரை புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்லூரி மாணவிகளை பாலியல் பேரத்தில் தள்ளியதாக கைதாகி சிறையிலுள்ள நிர்மலா தேவி, 4 முறை ஆளுனரை சந்தித்துள்ளதாக வெளியான அட்டைப்பட கட்டுரை தான் இந்தக் கைதுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

நக்கீரன் கோபாலுக்கு கிடைத்துள்ள ஒரே ஆதாரம் நிர்மலா பேசியுள்ளது மட்டுமே.

ஆனாலும் 130 மாணவிகளை இந்த வலைக்குள் நிர்மலா சிக்க வைத்துள்ளதாவும் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று நக்கீரனுக்கு கிடைத்துள்ளது.

நக்கீரன் கோபால் ஆதாரம் இல்லாமல் பிஜேபி அரசின் மிகப்பெரிய அதிகார வர்க்கம் கொண்ட ஒரு மாநிலத்தின் ஆளுநரை மோதி இருக்கமாட்டார்.

செய்திக்கு நல்ல ஆதாரம் இருந்தாலும் சாட்சியை கொல்ல வேண்டிய தேவை ஆளுநருக்கு உள்ளது.

இதனால், கடந்த மாதம் நீதிபதி முன்பாக நீதிமன்றில் வைத்து நிர்மலா, என்னை சிறைக்குள் கொலை செய்ய சதி நடப்பதாக அழுதுள்ளார்.

நிர்மலாவின் உயிருக்கு ஆபத்து!

ஆளுநர் தாத்தா பல மாணவிகளை பதம் பார்த்துள்ளார் என்பதை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் மாதம் சொல்லி விட்டார். இவைகளை ஊடகத்திற்கு கசிய விட வேண்டாம் என்று பொலிஸாருக்கு ஆளுநர் உத்தரவு கொடுத்திருந்தார்.

ஆனால் நக்கீரன் தகுந்த ஆதாரத்துடன் செய்தி எடுத்துவிட்டார்.

முற்று முழுதாக ஆளுநர் மற்றும் பல்கலைகழக துணைவேந்தர் தொட்டு கல்வி அதிகாரிகள் அரசியல் பலத்தில் உள்ளதால் நிர்மலாதேவி ஜெயிலுக்குள் வைத்துக் கொலை செய்யப்படலாம்.

எப்படியும் அந்தம்மாவின் உயிருக்கு ஆபத்து தான்! கோடம்பாக்கம் சுவாதி படுகொலையில் ராம்குமார் கொலை செய்யப்பட்டது போன்று நிர்மலாதேவியை ஜெயிலுக்குள் வைத்துக் கொலை செய்ய சென்னை பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி நக்கீரனுக்கு கிடைத்துள்ளது.

இந்த ராம்குமார் கொலை போன்று மதுரை சிறைக்குள் நிர்மலாவை கொலை செய்து விட்டு நிர்மலா தற்கொலை செய்து விட்டார் என்று ஒரு செய்தியும் வரும்.

இப்போது நிர்மலாதேவியை பிணை வழங்காமல் வெளியில் வரவிடாமல் சிறைக்குள் வைத்திருப்பதன் முழு நோக்கமே நிர்மலாதேவி பிணையில் வெளி வந்து ஊடக பேட்டி என்றால் ஆளுநரின் மானம் கப்பலேறி விடும் என்று அஞ்சித்தான் நிர்மலாவை அடைத்து வைத்துள்ளதாக அறிய முடிகின்றது

ஆக நிர்மலா கொல்லப்படுவது மட்டும் உறுதி ஆனாலும் ஆளுநர் பன்லாரி பன்வாரிலால் புரோஹித்தரை தமிழ் நாட்டை விட்டு அப்புறப்படுத்தும் நகர்வு ஒன்றை தமிழ் நாடு ஊடக உயர் மட்டம் செய்து வருகின்றது.

அதற்கு முன்பாக ஆளுநர் நிர்மலாவை விட்டு வைத்தால் நல்லது பார்ப்போம்.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers