பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் மற்றுமொரு அப்பிளிக்கேஷனான வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை தெரிந்ததே.
இதற்கு ஏற்றாற்போல் வாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் ஏற்கணவே உள்ள வால்பேப்பர் மற்றும் ஸ்டிக்கர் வசதியில் புதியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதனை வாட்ஸ் ஆப் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இவற்றில் முக்கியமாக பயனர்களைக் கவரக்கூடிய வகையில் அனிமேஷன்களைக் கொண்ட ஸ்டிக்கர்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தவிர பயனர்கள் தாம் விரும்பிய வகையில் ஸ்டிக்கர்களை உருவாக்கும் வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.