மேலும் விஸ்தரிக்கப்படும் Facebook News வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
50Shares

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கின் ஊடாக அதிகளவில் தகவல்கள் பகிரப்படுகின்றமை அறிந்ததே.

இவற்றில் உண்மைத் தகவல்களை காட்டிலும் போலியான தகவல்களே அதிகமாக பகிரப்பட்டுவருகின்றன.

இதனை தவிர்ப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இப்படியிருக்கையில் தனது தளத்தின் ஊடாகவே உண்மைச் செய்திகளை தனது பயனர்களுக்கு கொண்டு செல்வதற்கு பேஸ்புக் அறிமுகம் செய்யப்பட்ட வசதியே Facebook News ஆகும்.

இவ் வசதியானது ஏற்கணவே அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் ஐக்கிய இராச்சியத்திற்கும் விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்காக Archant, Conde Nast, The Economist, ESI Media, Guardian Media Group உட்பட மேலும் பல நிறுவனங்களுடன் பேஸ்புக் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்