இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Vanish mode வசதியை பயன்படுத்துவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
9Shares

வாட்ஸ் ஆப்பில் தானாக அழியக்கூடிய குறுஞ்செய்தி வசதியை அறிமுகம் செய்த பின்னர் இன்ஸ்டாகிராமிலும் அதனை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக்.

இன்ஸ்டாகிராமில் தரப்பட்டுள்ள குறித்த வசதியானது Vanish mode என அழைக்கப்படுகின்றது.

இவ் வசதி மூலம் அனுப்பப்பட்ட செய்தியானது படிக்கப்பட்ட பின்னர் தானாகவே அழிந்துவிடக்கூடியதாக இருக்கின்றது.

இப்படியிருக்கையில் குறித்த வசதியினை எப்படி ஆக்டிவேட் செய்வது என பார்க்கலாம்.

முதலில் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை திறந்து சட் விண்டோவிற்கு செல்லவும்.

அடுத்து சட் விண்டோவின் கீழ்ப் பகுதியில் இருந்து மேல் நோக்கி ஸ்வைப் (Swipe) செய்யவும்.

இப்போது Vanish mode ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.

Vanish mode இனை டிஆக்டிவேட் அல்லது Off செய்வதற்கு மீண்டும் கீழிருந்து மேலாக ஸ்வைப் செய்யவும்.

இவ்வாறே பேஸ்புக் மெசஞ்சரிலும் Vanish mode இனை ஆக்டிவேட், டிஆக்டிவேட் செய்ய முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்