சீன நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனே டிக் டாக் ஆகும்.
சிறிய வீடியோ டப்பிங் அப்பிளிக்கேஷனான டிக் டாக் ஆனது உலகளவில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்கியது.
எனினும் இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்த அப்பிளிக்கேஷனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த வாரமே இந்த அப்பிளிக்கேஷன் தடை செய்யப்பட்டது.
சமூக சீர்கேட்டினை ஏற்படுத்துவதாக தெரிவித்தே குறித்த அப்பிளிக்கேஷன் அங்கு தடை செய்யப்பட்டிருந்தது.
எனினும் தற்போது தடை நீக்கி மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களால் பதிவேற்றப்படும் ஆபாசமான வீடியோக்களை நீக்குவதாக அல்லது தடை செய்வதாக உறுதியளிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு மீண்டும் பாவனைக்கு விடப்படவுள்ளது.