சில மாதங்களுக்கு முன்னர் உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தனர்.
இதன்போது உறவினர்களுடன் தொடர்புகொள்வதற்கு வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி வந்தனர்.
இதனால் குறித்த காலப் பகுதியில் முன்னணி நிறுவனங்களின் வீடியோகொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன்கள் மிகவும் பிரபலமாக காணப்பட்டன.
இதனைத் தொடர்ந்து குறித்த அப்பிளிக்கேஷன்கள் தற்போதும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்படியிருக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன் ஆன Teams இல் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதாவது Offline நேரத்திலும் குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடிய வசதியாகும்.
இவ்வாறு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் இணைய இணைப்பு மீண்டும் கிடைக்கும்போது பெறுனர்களுக்கு கிடைக்கப்பெறும்.
இவ் வசதியானது தற்போது பரீட்சிக்கப்பட்டு வருகின்றது.
Android மற்றும் iOS அப்பிளிக்கேஷன்களில் இவ் வசதி தரப்படவுள்ளது.