வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் மற்றுமொரு புத்தம் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு மொபைல் அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் மாறியுள்ளது.

இவ்வாறான அப்பிளிக்கேஷனில் உள்ள குழுக்களில் நபர் ஒருவரின் விருப்பத்தினை மீறி அவரது இலக்கத்தினையும் இணைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

குறித்த குழுவில் இருந்து பயனர் தாமாக நீங்கக்கூடிய வசதி காணப்படுகின்ற போதிலும் அவரை மீண்டும் இணைக்கும் குறைபாடும் வாட்ஸ் ஆப்பில் உள்ளது.

எனவே பயனர் ஒருவர் தான் விரும்பாத குழுவில் இருந்து நிரந்தரமாக நீங்குவதற்குரிய வசதி வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பான 2.20.201.10 இனை நிறுவியிருக்க வேண்டும்.

அவ்வாறு நிறுவியிருப்பின் குறித்த குழுவிலிருந்து நீங்குவதற்காக Mute செய்யும்போது Always என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்