டிக் டாக்கிற்கு பதிலாக அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிளிக்கேஷன் தரவிறக்கத்தில் சாதனை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

சீன நிறுவனமான பைட் டான்ஸ் அறிமுகம் செய்த டிக் டாக் செயலியானது உலக நாடுகளில் மிகவும் பிரபல்யமானதாகும்.

இந்தியாவிலும் இந்த அப்பிளிக்கேஷனை பல மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

எனினும் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடைய ஏற்பட்ட எல்லை முறுகல் காரணமாக டிக் டாக் செயலிக்கு இந்தியா தடை விதித்தது,

டிக் டாக் செயலிக்கு அடிமையான பலர் மன உழைச்சலில் காணப்பட்டனர்.

இந்நிலையில் சிங்காரி எனும் அப்பிளிக்கேஷன் டிக் டாக்கிற்கு பதிலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் குறித்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இப்படியிருக்கையில் தற்போது 30 மில்லியன் வரையானவர்கள் குறித்த அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்துள்ளனர்.

18 வயது தொடக்கம் 35 வயது வரையானவர்களே இந்த அப்பிளிக்கேஷனை அதிகம் தரவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்