இணைய உலாவியிலும் இனி வாட்ஸ் ஆப் அழைப்பினை ஏற்படுத்தலாம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் மொபைல் அப்பிளிக்கேஷன் மற்றும் இணைய உலாவியில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் சேவை என்பவற்றில் புதிய வசதிகள் கொண்டுவரப்படவுள்ளன.

இவற்றில் முக்கியமாக இதுவரை இணைய உலாவியில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப்பில் தரப்படாதிருந்த அழைப்பு சேவைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இதன்படி வீடியோ அழைப்பு, ஆடியோ அழைப்பு மற்றும் குழு அழைப்பு என்பவற்றினை மேற்கொள்ள முடியும்.

அத்துடன் ஐகான்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

தவிர மொபைல் அப்பிளிக்கேஷனில் உள்ள அழைப்பு பொத்தான்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இணைய உலாவிகளுக்கான வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பான 2.2037.6 இல் இவ் வசதிகள் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்