இந்தியாவில் மீண்டும் டிக் டாக்: ஆனால் இது வேற லெவல்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

முன்னணி வீடியோ டப்பிங் அப்பிளிக்கேஷனான டிக் டாக் அமெரிக்காவில் மாத்திரமன்றி இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் பல மில்லியன் இந்திய பயனர்கள் சோகத்தில் உள்ளனர்.

இவ்வாறு சோகத்தில் உள்ளவர்களுக்கு ஓர் ஆறுதலான செய்தியை அண்மையில் இன்ஸ்டாகிராம் வெளியிட்டிருந்தது.

அதாவது இன்ஸ்டாகிராமில் டிக் டாக்கினை போன்று Reels எனும் வசதி வழங்கப்பட்டது.

இப்படியான நிலையில் யூடியூப் நிறுவனம் மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி முற்றிலும் டிக் டாக்கினைப் போன்றதொரு வசதியினை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இச் சேவையானது Shorts என அழைக்கப்படவுள்ளது. மேலும் உலகளாவிய பயனர்களுக்கும் இச் சேவை விரைவில் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்