பயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

Zoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது.

அந்த அளவிற்கு லாக்டவுன் காலப் பகுதியில் மிகவும் பிரபல்யம் பெற்ற அப்பிளிக்கேஷனாக காணப்படுகின்றது.

எனினும் இந்த அப்பிளிக்கேஷனில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதாக அவ்வப்போது குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.

அதன் பின்னர் குறித்த குறைபாடுகளை அந்நிறுவனம் நீக்கி வருகின்றது.

இந்த வரிசையில் பயனர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதை தடுப்பதற்கு இரு படிமுறை அங்கீகாரத்தினை (two-factor authentication) அறிமுகம் செய்துள்ளது.

இவற்றில் password/pin உடன் fingerprints/voice என்பனவற்றினைப் பயன்படுத்தலாம் அல்லது பயனர் விரும்பும் மற்றுமொரு மாற்று முறையினையும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக ஸ்மார்ட் கார்ட் அல்லது மொபைல் சாதனம் என்பவற்றினையும் பயன்படுத்தி தமது கணக்கினுள் லாக்கின் செய்ய முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்