ஐந்து டேட்டிங் அப்பிளிக்கேஷன்களுக்கு அதிரடித் தடை: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இளம் வயதினர்களை அதிகம் கவரக்கூடிய அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக டேட்டிங் அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான அப்பிளிக்கேஷன்களை உலக அளவில் பல மில்லியன் வரையான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் சில நாடுகளின் சட்ட திட்டங்களை மீறியுள்ள இவ்வாறான அப்பிளிக்கேஷன்கள் அந்நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறே பாகிஸ்தானிலும் தற்போது ஐந்து டேட்டிங் அப்பிளிக்கேஷன்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் Tinder மற்றம் Grindr என்பனவும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆனது இந்தோனேசியாவிற்கு அடுத்ததாக முஸ்லிம் மக்களை அதிகளவில் கொண்ட உலகின் இரண்டாவது நாடாக காணப்படுகின்றது.

எனவே அம் மக்களைப் பாதிக்கக்கூடிய ஒழுக்கக்கேடான அம்சங்களை குறித்த அப்பிளிக்கேஷன்கள் கொண்டிருப்பதனால் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்